கோவையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்கு கர்நாடகா மாநிலத்தில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. அங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கர்நாடகா போலீசாருக்கு புகார்கள் குவிந்தன.
இந்த நிலையில், கர்நாடக போலீசார் 15 பேர் கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா வீதியில் உள்ள பொங்கலூர் பழனிசாமி இல்லத்தில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் கோவை பீளமேட்டில் உள்ள அவரது கல்லூரியிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை முடிவில் என்ன தவறுகள் நடந்துள்ளது என்பது தெரியவரும்.
இத்தனை நாட்களாக தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை கொள்ளையடித்து வந்த திமுகவினர் அண்டை மாநிலத்தையும் விட்டு வைக்கவில்லை என்பது பொங்கலூர் பழனிசாமி மூலம் மக்களுக்கு தெரியவந்துள்ளது.