திருவாரூரில் கஞ்சா கடத்திய திமுக நிர்வாகி மகன் ரமணா என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர், நகர பொருளாளர், நகராட்சி 24வது வார்டு திமுக கவுன்சிலர் ரஜினி சின்னா என்கிற சின்ன வீரன் என்பவரின் மகன் ரமணா கஞ்சா கடத்தியபோது போலீசார் அவனை கஞ்சாவுடன் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர், திருவாரூர் நகர் பொருளாளர், நகராட்சி 24-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ரஜினி சின்னா என்கிற சின்ன வீரன் என்பவரின் மகன் ரமணா கஞ்சா கடத்திய போது காவல்துறையால் கஞ்சாவுடன் கைது.
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கணஜோராக நடைபெறுவதற்கு தி.மு.க கும்பலே காரணம்.
கஞ்சா விற்பனையை தடை செய்ய முயற்சிக்கும் காவல்துறையை தடுத்து, கஞ்சா விற்பனைக்கு மாவட்டம் முழுவதும் துணை போகிறது தி.மு.க ரவுடி கும்பல் என தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.