உலகிற்கே உணவளிக்கும் விவசாயப் பெருமக்கள் அனைவருக்கும் தேசிய விவசாயிகள் தின வாழ்த்துக்கள் என பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்;
தேசிய விவசாயிகள் தினமான இன்று உலகிற்கே உணவளிக்கும் விவசாயப் பெருமக்கள் அனைவருக்கும் தமிழக பாஜக
சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாய நலன் சார்ந்து மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, விவசாயம் செழித்து, விவசாயிகள் வாழ்வு ஏற்றம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.