தென்மாவட்டம் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் குழு 20ம் தேதியே பார்வையிட சென்றது. ஆனால் மாநிலத்தின் முதல்வர் ஸ்டாலின் 21ம் தேதி, நான்கு, ஐந்து நாட்கள் கழித்து சென்றார். அக்கறையின்மையுடன் ஆட்சி நடப்பதற்கு இதை விட உதாரணம் கிடையாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று (டிசம்பர் 24) அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தின் பொருளாதாரம் கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மத்திய அரசு கொடுத்த 1,000 கோடி ரூபாயில் 800 கோடி ரூபாய் வங்கி கணக்கில் உள்ளது. பணம் இல்லை என்றால் அடுத்த நாளே வரும். ஆனால் கொடுத்த பணத்தையே அரசு செலவிடவில்லை.
உதயநிதி ஸ்டாலின் அப்பன் வீட்டு சொத்து என்று சொன்னது கரெக்ட் தான் என்கிறார்; இது அவரது ஸ்டைல். இதன் விளைவை நாடாளுமன்றத் தேர்தலில் பார்க்க போகிறீர்கள். உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.,வை சுக்குநூறாக உடைத்து பீஸ் பீஸாக கடலில் எறியப் போகிறார். அவர் தொடர்ந்து சொல்லட்டும். தமிழக மக்களுக்கு நல்லது. திமுக என்ற தீய சக்தியை அப்புறப்படுத்த இது ஒரு வாய்ப்பு.
மத்திய அரசை பொருத்தவரை பெண் ஜாதி, இளைஞர் ஜாதி, விவசாயிகள் ஜாதி, ஏழை ஜாதி ஆகிய நான்கு ஜாதிகள்தான் உள்ளன. ஏழை என்ற ஜாதி இருக்கக் கூடாது, மீதமுள்ள மூன்று ஜாதிகள் முன்னேற வேண்டும்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு வன்முறையை உருவாக்கும். அரசியலுக்கு வேண்டுமானால் பேசலாம். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் தேவையற்றது. சாவியை தொலைத்த கர்நாடகாவில் தேட வேண்டும். ஆனால் லைட் உள்ள இடத்தில் போய் தேடக்கூடாது.
தூத்துக்குடி மாவட்டம் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் குழு 20ம் தேதியே பார்வையிட சென்றது. ஆனால் மாநிலத்தின் முதல்வர் ஸ்டாலின் 21ம் தேதி ஐந்து நாட்கள் கழித்து சென்றார். மக்கள் மீது அக்கறையின்மையுடன் ஆட்சி நடப்பதற்கு இதை விட உதாரணம் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.