கிறிஸ்துமஸ் விழா இன்று (டிசம்பர் 25) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போன்று நமது நாட்டிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர்.
அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தஞ்சாவூரில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
கிறிஸ்துமஸ் பெருவிழாவை ஒட்டி, இன்று, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள, புனித லூர்து அன்னை ஆலயத்திற்குச் சென்று, இறை வழிபாடு செய்து வணங்கினோம். சமூகத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும் பெருகவும், அன்பு நிலைக்கவும் வேண்டிக் கொண்டோம். ஆலய பங்குத் தந்தை அருள்திரு மரியசூசை அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.