மத்திய அரசு மீது திமுக வீண் பழி சுமத்தி வருகிறது: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை!

மத்திய அரசு மீது வீண் பழி சுமத்தி, திமுகவினர் வம்பு சண்டை போடுகின்றனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலைத்தில் இன்று (டிசம்பர் 25) அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:
மத்திய அரசு மீது வீண் பழி சுமத்தி, திமுகவினர் வம்பு சண்டை போடுகின்றனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 2வது முனையத்தை ஜனவரி 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க வாய்ப்புள்ளது. இ.ண்.டி. கூட்டணி கூட்டத்தில் நிதீஷ் குமார் ஹிந்தியில் பேசியதை தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புக்கு அனுமதிக்கவில்லை. மற்ற மாநிலங்களின் வளர்ச்சியையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் திமுக அரசு கண்ணாடியில் பார்க்க வேண்டும். 50 ஆண்டுகள் 2வது இடத்தில் இருந்த வளர்ச்சி 3வது இடத்துக்கு சென்று விட்டது.

ஊழல் காரணமாக பல துறைகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தின் வளர்ச்சி எவ்வளவு பின்னோக்கி செல்வதை திமுக அரசு பார்க்க வேண்டும். மழை வெள்ள பாதிப்புக்கு கண்டிப்பாக மத்திய அரசு உறுதியாக நிவாரணம் வழங்கி விடும்.

அதை மக்களுக்கு கொடுத்து விட்டோம் என்று திமுக சந்தோஷப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஏற்கனவே வளர்ச்சி பின்தங்கியிருந்த நிலையில் மழை வெள்ளம் காரணமாக 4 மாவட்டங்களில் உற்பத்தி திறன் மேலும் பின் தங்கிப் போகிறது. தூத்துக்குடியின் உற்பத்தி திறனை மீண்டும் கொண்டு வர இன்னும் 2 ஆண்டுகளாகும்.

ஒரு பக்கம் மழை வெள்ள பாதிப்பு இன்னொரு புறம் உற்பத்தி திறனை இழந்து வருவதால் தமிழகத்தின் வளர்ச்சியை மேலும் 6 மாதங்களுக்கு பின்னோக்கி கொண்டு செல்கிறது.

தமிழக அரசு, மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவதற்கு முன்னதாகவே மழை வெள்ள பாதிப்பு பற்றி தெரிந்தவுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளார். தமிழகத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிடவும் வருகிறார். ஆனால் மத்திய அரசு மீது வீண் பழி சுமத்தி திமுகவினர் வம்பு சண்டை செய்கின்றனர்.

மத்திய அரசை குறை சொல்ல தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. பிரதமரை, ‘கோ பேக் மோடி’ என்று தி.மு.க.,வின் தொழில் நுட்பப் பிரிவினர் பதிவு செய்வதை போல் தமிழகத்தில் முதல்வர் எங்கு சென்றாலும் கோ பேக் ஸ்டாலின் என்று கோஷம் போட முடியும். ஆனால் முதல்வர் என்ற பொறுப்புக்கு மரியாதை கொடுக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது பற்றி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேருக்கு நேர் நின்று பேச தயாரா? என சவால் விட்டுள்ளார்.

தமிழக அரசு கால்வாய்களை சீர்படுத்த வேண்டும். ஆனால் இது குறித்து திமுக சிந்திக்காமல் மத்திய அரசு மீது வீண் பழி சுமத்தி வருகின்றது. இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top