ஜனவரி 2ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகின்றார். அவர் வருகையை முன்னிட்டு ஏற்பாட்டு பணிகளை கவனித்திடவும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும் குழு ஒன்று அமைத்து பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகின்ற ஜனவரி 2, 2024 செவ்வாய்கிழமை அன்று, தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்கள். அவர்களது வருகையினை முன்னிட்டு திருச்சியில் ஏற்பாட்டு பணிகளை முழுமையாக கவனித்திடவும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும் மாநில பொது செயலாளர் திரு.கருப்பு முருகானந்தம் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவில்
1) டாக்டர் சிவ சுப்ரமணியன், மாநில இணை பொருளாளர்
2) இல கண்ணன், மாவட்ட பார்வையாளர்
3) எஸ்.ராஜசேகரன், மாவட்டத் தலைவர் திருச்சி நகர்
4) ஆர்.அஞ்சாநெஞ்சன், மாவட்டத் தலைவர் திருச்சி புறநகர்
5) ஏ.விஜயகுமார், மாவட்டத் தலைவர் புதுக்கோட்டை மேற்கு
6) சி.ஜெகதீசன், மாவட்டத் தலைவர் புதுக்கோட்டை கிழக்கு
7) ராமச்சந்திரன், மாநில துணை தலைவர், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு
8) கவிதா ஸ்ரீகாந்த், மாநில பொதுச் செயலாளர் மகளிர் அணி
9) கௌதம் நாகராஜ், மாநில பொதுச் செயலாளர், இளைஞர் அணி
ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து செயல்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.