அபெகா பண்பாட்டு இயக்கம் நடத்தி வரும் ஜெயராமன், ‘சாதி கக்கூஸ் கோயில்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி அதை புதுக்கோட்டையில் வரும் 30ல் வெளியிட உள்ளதாக அறிவித்திருக்கிறார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக புதுக்கோட்டையைச் சேர்ந்த பா.ஜ.க., மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த் கூறியதாவது: இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் வம்படியாக வலதுசாரிகளையும், காலம் காலமாக இந்தியா முழுதும் பின்பற்றப்பட்டு வரும் கலாசாரம், பண்பாடுகளை கேலியும், கிண்டலும் செய்வதோடு கொச்சையாக விமர்சிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
‘சாதி கக்கூஸ் கோயில்’ புத்தகத்தில் ஹிந்து கோவிலும் இந்தியாவின் கக்கூசும் ஒன்றே, சிவபெருமானுக்கு ஜாதிச் சான்றிதழ், ஹிந்து மதம் மலம் தின்றது, கொலைகள் செய்யும் ஹிந்து மதம் ஆகிய தலைப்புகளில் முரண்பட்ட கருத்துக்களை பதிவிட்டிருப்பதாக தகவல் வெளிவருகிறது,
அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டால் ஒட்டுமொத்த ஹிந்துக்கள் மனம் புண்படுவது மட்டுமின்றி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும். எனவே புத்தகத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்க உள்ளோம்.
மேலும் காவல்துறையிலும் புகார் கொடுக்கப்படும். அதையும் மீறி புத்தகம் வெளியிடப்பட்டால் கட்சி தலைமையின் அனுமதியோடு போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயிலில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் குற்றவாளிகளை இன்னமும் கண்டுபிடிக்காத திராவிட மாடல் அரசு இந்து கோயில்களை கக்கூஸ் என்று கூறுவது வேடிக்கை! திராவிட மாடல் அரசு கக்கூஸ் அரசாக மாற வேண்டாம் என்று மக்கள் எச்சரிக்கிறார்கள்.