கோவை- பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 30ம் தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
கோவையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக காலை 11.30 மணி அளவில் பெங்களூருவை சென்றடையும். மீண்டும் பிற்பகல் 1.40 மணிக்கு பெங்களூருவில் புறப்பட்டு இரவு 8 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை அடையும்.
இந்த நிலையில், வரும் 30ஆம் தேதி கோவை – பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது.
வந்தே பாரத் ரயில் சேவையால் கோவை, திருப்பூர், சேலம், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் மிக வேகமாக பெங்களூருவுக்கு செல்லும் வாய்ப்பை பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வந்தே பாரத் ரயில் சேவைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.