ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லாந்தை என்ற கிராமத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரை சூட்டி மக்கள் கவுரவப்படுத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் லாந்தை ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட லாந்தை கிராமத்திற்கும், தாமரைக்குடி, சின்ன தாமரை கொடி ஆகிய கிராமங்களுக்கு மிக நீண்டகாலமாக ரயில்வே பாலம் அமைக்கப்படாமல் இருந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்படி மேற்கூறிய கிராமங்களில் பாலம் அமைப்பதற்காக ரயில்வே அமைச்சரிடம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். அதன்படி புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்களது கோரிக்கை நிறைவேற்ற உதவிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரை லாந்தை கிராம சாலைக்கு ஊராட்சி மன்றம் சார்பில் சூட்டியுள்ளனர். அதன் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஆனால் 200 ரூபாய் உ.பி.ங்க மத்திய நிதியமைச்சர் பெயரில் போலியாக போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்தனர். அவர்களுக்கு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மற்றும் சமூக ஊடகத்தினர் ஆதாரத்துடன் பதிலடி கொடுத்து வருகின்றனர்.