தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (டிசம்பர் 28) காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்;
திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ்த் திரைப்பட உலகின் ஜாம்பவானான இவரது வசீகர நடிப்புத்திறன் கோடிக்கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு அரசியல் தலைவராக, அவர் பொதுமக்கள் சேவையில் தீவிர அர்ப்பணிப்புடன் செயல்பட்டார், தமிழக அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது. என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்த அவருடன் பல ஆண்டுகளாக நான் நடத்திய உரையாடல்களை அன்புடன் நினைவு கூர்கிறேன். இந்தச் சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் எண்ணற்ற ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.