கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் இருந்து காணொளி வாயிலாக கொடியசைத்து துவக்கி வைத்தார். புதிய ரயில் சேவையை வழங்கியதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்;
கோவை மற்றும் பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயிலை இன்று காணொளி வாயிலாக கொடியசைத்து துவக்கி வைத்தார் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்.
இதுவரை 5 வந்தே பாரத் ரயிலை தமிழகத்திற்கு வழங்கிய நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு பாஜக சார்பாகவும் தமிழக மக்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.