ஸ்வச் பாரத்: திருச்சியில் தூய்மை பணியில் ஈடுபட்ட தலைவர் அண்ணாமலை!

தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் இணைந்து திருச்சியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று (ஜனவரி 2) தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பா.ஜ.க., மாநிலத் தலைவர் அண்ணாமலை தூய்மைப் பணிகளை மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

தமிழகத்தில் குப்பைகள் அதிகளவு சேர்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு குப்பைகளை அகற்றி மீண்டும் உரமாக மாற்றி பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும்.

அத்தகைய திட்டங்கள் இல்லாததால் அதிகமான குப்பை கிடங்குகள் தான் உருவாகிக் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் குப்பைகளை அகற்றாததால் சாலையில் துர்நாற்றம் வீசும் அளவுக்கு உள்ளது. குப்பை அகற்றம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த சுத்தம் செய்யும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் திருச்சிக்கு வரும்போது முக்கிய தலைவர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு அளிக்க இருப்பது தெரியவந்தது. பிரதமரை வரவேற்க முக்கியத் தலைவர்கள் விரும்பினால் அவர்கள் வரவேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

மிக முக்கியமாக இரண்டு பெரு வெள்ளங்கள் வந்தும் தமிழக அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமழை பெய்யும் என முன்னெச்சரிக்கை கொடுத்தும் தமிழ்நாடு அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் ஜீரோ சதவீதம் பணியில் ஈடுபடாமல் இருந்தார்கள். இது தமிழக அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது தெரிவித்தார்.

முன்னதாக மாநில தலைவர் அண்ணாமலை தூய்மை பணி குறித்து தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட செயல்வீரர்கள் பங்கேற்ற ஸ்வச் பாரத் பிரச்சாரம் இயக்கம் திருச்சியில் நடைபெற்றது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை தெற்கு எம்.எல்.ஏ.வும், தேசிய மகிளா மோர்ச்சா தலைவருமான ஸ்ரீமதி வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் திருச்சி முழுவதும் தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.

5 ஆயிரத்திற்கும் மேறப்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இன்று திருச்சி முழுவதும் 75 மண்டலங்களில் இந்த இயக்கத்தில் பங்கேற்கிறார்கள். இந்த தூய்மை இந்தியா இயக்கம் திருச்சியின் ஸ்வச் சர்வேக்ஷன் தரவரிசையை மேம்படுத்தும் என்று நம்புகிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top