தூய்மையான நகரங்களில் மத்திய பிரதேசம் ‘இந்தூர்’ முதலிடம்: 199வது இடத்தில் சென்னை!

நாட்டின் மிக தூய்மையான நகரங்களில் தொடர்ந்து 7வது ஆண்டாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

‛சுவச் சுவேக்ஷான்’ திட்டத்தின் கீழ் கடந்த 2016ம் ஆண்டு முதல் பாரத நாட்டில் தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

2023ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 4,477 நகரங்களில், குப்பைகளை கையாளுதல், பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்தல், நிர்வகித்தல், மறுபயன்பாடு, மறு சுழற்சிசெய்தல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தூய்மைப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி 12 கோடி பேர் தங்களது கருத்தினை பதிவு செய்தனர். இந்த பட்டியலை ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டார்.

இந்த பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தூருடன் குஜராத்தின் சூரத் நகரமும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளது.

3வது இடத்தை மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையும்
4வது இடத்தை ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினமும்
5வது இடத்தை மத்திய பிரதேசம் போபாலும்
6வது இடத்தை ஆந்திராவின் விஜயவாடாவும்
7 வது இடத்தை டெல்லி மாநகராட்சியும்
8 வது இடத்தை ஆந்திராவின் திருப்பதியும்
9 வது இடத்தை தெலுங்கானாவின் ஐதராபாத் நகரமும்
10வது இடத்தை மஹாராஷ்டிராவின் புனே நகரமும் பிடித்துள்ளன. தூய்மையான மாநிலங்களில் மஹாராஷ்டிரா, ம.பி., மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.

முதல் 100 இடங்களில் தமிழகத்தில் இருந்து எந்த நகரமும் தேர்வாகவில்லை. திருச்சி 112வது இடத்தையும், சென்னை 199வது இடத்தையும் பிடித்துள்ளன.

திமுக ஆட்சியில் சிங்கார சென்னையாக மாற்றுவதற்காக மழைநீர் வடிகால் பணியை 4,000 கோடியில் செய்தனர். ஆனால் அத்தனையும் பித்தலாட்டம் என்பதை மழை வெள்ளம் நிரூபித்தது. சேரும், சகதியுமாக கடந்த ஒரு வாரமாக மாநகராட்சியை திமுக அரசு வைத்திருந்ததை உலகமே பார்த்தது.

மேலும் மத்திய அரசு சார்பில் வழங்கப்படுகின்ற நிதியை திமுக அரசு என்ன செய்கிறது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top