பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஓவியத்தை தனக்கு பரிசளித்த ஜஸ்னா சலீமை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
கேரளா மாநிலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 15ம் தேதி சென்றிருந்தார். அப்போது குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின் கேரள பாஜக பிரமுகரும், நடிகருமான சுரேஷ்கோபியின் மகள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை பல்வேறு பிரபலங்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது ஜஸ்னா சலீம் என்ற இஸ்லாமிய பெண் பிரதமருக்கு கிருஷ்ணர் ஓவியம் ஒன்றை வழங்கினார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
குருவாயூரில், ஜஸ்னா சலீம் ஜியிடம் இருந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஓவியத்தைப் பெற்றேன். கிருஷ்ண பக்தியில் அவரது பயணம் பக்தியின் மாற்றும் சக்திக்கு ஒரு சான்றாகும். குருவாயூரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஓவியங்களை அவர் பல ஆண்டுகளாக முக்கிய திருவிழாக்களில் வழங்கி வருகிறார், எனக் குறிப்பிட்டுள்ளார்.