தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது: மத்திய நிதியமைச்சர்- நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் அமர்ந்து அயோத்தி ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சியை காணும் வகையில் எல்.இ.டி. திரை பொருத்தப்பட்டது.

ஆனால் விடியாத திமுக அரசு அந்த எல்.இ.டி. திரையை போலீசாரை வைத்து அகற்றியது. அதே போன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அயோத்தி நிகழ்ச்சியை காண வைக்கப்பட்ட எல்.இ.டி. திரைகளையும் போலீசார் அகற்றினர். இந்த சம்பவம் இந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவில்களில் ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சியை காண்பதற்கு கூட தமிழகத்தில் இந்துக்களுக்கு உரிமை இல்லையா என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், ‘‘காஞ்சியில் மட்டும் 466 இடங்களில் அயோத்தி கும்பாபிஷேகத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட எல்.இ.டி. திரைகள் அகற்றப்பட்டன.

தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது. திமுக அரசு குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. எல்.இ.டி. திரை வியாபாரிகளின் வயிற்றிலேயே அடிக்கிறது. இந்து விரோத திமுக அரசு தற்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது.’’ என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு எல்இடி மீண்டும் அமைக்கப்பட்டு வெற்றிகரமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top