ராமர் ஆலய பிராண பிரதிஷ்டை பற்றி பெட்டி செய்தியாக கூட போடாத எடப்பாடி  அ.தி.மு.க.வின் ‘நமது அம்மா” !

அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் ஆலயத்தின் பிராண பிரதிஷ்டை கடந்த ஜனவரி 22ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதிலும் உள்ள ஹிந்துக்கள் அனைவரும் வீடியோ வாயிலாக தரிசனம் செய்தனர்.

அதே போன்று பாரத தேசமே விழாக்கோலம் பூண்டது. ஒவ்வொரு வீடுகளிலும் விளக்கு ஏற்றி ஸ்ரீராமரை வழிப்பட்டனர். இது பற்றி அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டது.
ஆனால் அதிமுக, எடப்பாடி பழனிசாமி சார்பில் நடத்தும் நாளிதழான ‘நமது அம்மா’வில் ஒரு பெட்டி செய்தியாக கூட இந்தச் செய்தி இடம் பெற வில்லை மொத்தம் 14 முதல் 18  பக்கங்களை கொண்டதாக அந்நாளிதழ் தினந்தோறும் வெளியாகிறது.

இங்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அயோத்தியில் இல்லாமல் வேறு எங்கு ஸ்ரீராமருக்கு கோவில் கட்ட முடியும் என்று கேட்டது நினைவு கூரத்தக்கது. நமது அம்மா என்று பத்திரிகைக்குப் பெயர் வைத்து விட்டு, அம்மா ஆசைப்பட்ட ராமர் கோயில் உருவாகியிருக்கும் போது, அது பற்றிய செய்தியை போடாமல் மறைத்து விட்ட எடப்பாடியின் செயலை, இக்கட்சியினரே காரி உமிழ்கின்றனர். முஸ்லிம் வீட்டு களுக்காக எஸ்டிபிஐ  மாநாட்டுக்கு போவது இருக்கட்டும், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்வது இருக்கட்டும், ஆனால் ஆலய பிராணப் பிரதிஷ்டை பற்றி செய்தி கூடவா போடக்கூடாது என்று கேள்வி எழுப்புகின்றனர். 

அதே போன்று,  ராமர் கோவில் விழாவை கோவில்களில் கொண்டாடுவதற்கு இந்து ஆன்மிக  அமைப்புகள் செய்திருந்த ஏற்பாடுகளை   ஹிந்து விரோதி திமுக அரசு  தடை விதித்ததையும்  எடப்பாடி பழனிசாமி உட்பட அக்கட்சியில் யாருமே எதிர்க்க வில்லை.  ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.

இதனால் இந்து உணர்வுள்ள அதிமுக காரர்கள், உள்ளம் கொதித்துப்  போய் உள்ளனர். விரைவில் அவர்கள் எடப்பாடியை விட்டு விலகி பாஜக பக்கம் வருவார்கள் என்று கூறப்படுகிறது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top