நாடாளுமன்றத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் இ.ண்.டி. கூட்டணியை விட்டு வெளியேறுவதை உறுதி செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அதே நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்ப்பதற்காக, ஊழல் கட்சிகளான காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இ.ண்.டி. என்ற கூட்டணியை அமைத்தது.
இதனிடையே, வரும் நாடாளுமன்ற தேர்தலை ஊழலால் ஊறிப்போன இ.ண்.டி. கூட்டணி இணைந்து சந்திக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை என்பதை போல அக்கூட்டணி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இ.ண்.டி. கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினை, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வறுத்தெடுத்தார். அதாவது தேசிய மொழியான இந்தியை ஏன் கற்றுக்கொள்ளவில்லை என்ற பாடத்தையும் எடுத்தார். இது நாடு முழுவதும் மிகப்பெரிய பேசும் பொருளாக மாறியது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் இ.ண்.டி. கூட்டணியை விட்டு மம்தா வெளியேறுவது உறுதியாகியுள்ளது.
ஊழல் செய்வதற்காகவே அமைக்கப்பட்ட இ.ண்.டி. கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கலைந்து விடும் என்பது மட்டும் உண்மை. மீண்டும் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார் என சாமானிய மக்கள் அனைவரின் கருத்தாக உள்ளது.