பிரதமர் மோடி அவர்களின் முதன்முறை வாக்காளர்களர்களான இளைஞர்களை, நாட்டின் வளர்ச்சிக்கான பயணத்தில் இணைத்துக் கொள்ளும் முயற்சியான, நமோ நவ்மத்தாதா சம்மேளனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியைத் தருகிறது என மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்;
இன்றைய தினம், சிதம்பரத்தில் உள்ள எடிசன் ஜி அகோரம் நினைவுப்பள்ளியில் நடைபெற்ற, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின், முதன்முறை வாக்காளர்களர்களான இளைஞர்களை, நாட்டின் வளர்ச்சிக்கான பயணத்தில் இணைத்துக் கொள்ளும் முயற்சியான, நமோ நவ்மத்தாதா சம்மேளனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியைத் தருகிறது. வலிமையான ஜனநாயகத்தில் இளைஞர்களின் பங்களிப்பை பற்றி நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் இன்று தனது உரையில் குறிப்பிட்டார்.
கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் மருதை அவர்களுடன் இணைந்து, கடலூர் சுற்றுவட்டார மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முதல் வாக்கின் முக்கியத்துவத்தையும், ஒவ்வொரு வாக்குகளின் அதிகாரத்தையும் பற்றி எடுத்துக் கூறினோம். நாட்டிற்கும், மாணவர்களுக்கும் நலம் தரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு பார்வை குறித்தும் உரையாடினோம். இவ்வாறு தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.