பா.ஜ.க., பிரமுகர் கொலை வழக்கு: தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 15 பயங்கரவாதிகளுக்கு தூக்கு!

கேரளாவில் பாஜக பிரமுகர் ரஞ்சித் சீனிவாசனை படுகொலை செய்த வழக்கில் 15 பயங்கரவாதிகளுக்கு ஆழப்புழா நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் அனைவரும் விரைவில் தூக்கிலப்பட உள்ளனர்.

கேரளா மாநிலம் ஆழப்புழாவை சேர்ந்தவர் ரஞ்சித் சீனிவாசன். வழக்கறிஞரான இவர் பா.ஜ.க.வில் ஓபிசி அணியின் தலைவராக இருந்தார். கடந்த கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி அவரது குடும்பத்தினர் கண்முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை நாட்டையே அதிர்ச்சி அடைய செய்தது. படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பாஜகவினர் குரல் எழுப்பியிருந்தனர்.

இந்த வழக்கில் நிஜாம், அஜ்மல், அனூப், எம்டி அஸ்லாம், சலாம், அப்துல் கலாம், சஃபாருதீன், முன்ஷாத், ஜசீப், நவாஸ், ஷெமீர், நசீர், ஜாகீர் உசேன், ஷாஜி மற்றும் ஷாம்னாஸ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ உடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த வழக்கு ஆழப்புழா மாவட்டம் மாவெலிகாராவில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

மேலும் அவர்கள் 15 பேருக்கு மரண தண்டனை வழங்கி இன்று (ஜனவரி 30) நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவு மூலம் இந்தியாவில் ஒரே வழக்கில் அதிகமானவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளில் இது டாப் 3ல் இடம் பிடித்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை அறிந்து கேரள மாநில பாஜகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கப்பெற்றால் மட்டுமே அடுத்த முறை தவறுகள் செய்வதற்கு அஞ்சுவார்கள். கேரளாவில் இந்த தீர்ப்பு கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஒரு அச்சத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top