பத்மஸ்ரீ விருது பெற்ற, இயற்கை விவசாயி செல்லம்மாளை சந்தித்த தலைவர் அண்ணாமலை!

இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, பல இயற்கை விவசாயிகளை உருவாக்கியவர் இயற்கை விவசாயி செல்லம்மாள் எனத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. அதில் இயற்கை விவசாயி செல்லம்மாள் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஏற்கனவே பத்மஸ்ரீ விருது அறிவித்தபோதே தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று இயற்கை விவசாயி செல்லம்மாள் அவர்களை தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்;

இன்றைய தினம், பாரதத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பெற்ற, இயற்கை விவசாயி, அம்மா திருமதி. கே.செல்லம்மாள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் பிறந்து, தெற்கு அந்தமான் தீவுகளில் வசிக்கும் அம்மா திருமதி. கே. செல்லம்மாள் அவர்கள், தென்னை மற்றும் பனை மரங்களை நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்ற, முற்றிலும் இயற்கையான முறைகளைக் கண்டறிந்தவர். இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, பல இயற்கை விவசாயிகளை உருவாக்கியவர்.

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, இந்த ஆண்டிற்கான, பத்மஸ்ரீ விருது வழங்கி, அம்மா திருமதி. செல்லம்மாள் அவர்களுக்கு கௌரவம் சேர்த்துள்ளது நமக்கெல்லாம் பெருமை.

அம்மா திருமதி. கே. செல்லம்மாள் அவர்கள், மேலும் பல ஆண்டுகள் தங்கள் அரும்பணிகளைத் தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top