சாலை விரிவாக்கத்துக்கு சொந்த வீட்டை இடித்து அரசுக்கு ஒப்படைத்த தெலங்கானா பா.ஜ.க., எம்.எல்.ஏ.

சாலை விரிவாக்கப் பணிக்காக தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ., ரணமா ரெட்டி தனது வீட்டை அவரே ஜேசிபி இயந்திரம் வைத்து இடித்து தரைமட்டமாக்கி மாநகராட்சியிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டம் வண்டலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமணா ரெட்டி. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.
இதே தொகுதியில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகிய இருவரையும் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதனால் அம்மாநில மக்கள் அனைவரின் கவனத்தையும் ரமணா ரெட்டி ஈர்த்தார்.

இந்த நிலையில், மாஸ்டர் பிளான் திட்டப்படி தற்போது காமாரெட்டிபகுதியில் சாலைகளை 80 அடிக்கு அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதனால் பலர் தங்களது வீடுகளை இழக்க நேரிட்டது.

இந்த நிலையில், வண்டலூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டை ரமணா ரெட்டியே முன் நின்று இடித்து தரைமட்டமாக்கினார். இவரின் செயல் அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளது.
இது தொடர்பாக ரமணா ரெட்டி எம்.எல்.ஏ., செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:

மக்களின் நலனே எனக்கு முக்கியம். நான் ஒன்றும் பெரிய தியாகத்தை செய்துவிடவில்லை. மக்களுக்கோ, அதிகாரிகளுக்கோ ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்த நான் விரும்பவில்லை.

ஆனால் மக்களுக்கு ஒரு வேண்டுகோள். இதே போன்று சாலையை அகலப்படுத்தும் திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ரமணா ரெட்டி எம்.எல்.ஏ., போன்று அனைவரும் இருக்க வேண்டும் என சமூக வலைத்தளத்தில் பாராட்டப்பட்டு வருகிறார். இதுதான் சங்கி என்று அழைக்க தகுதியான கோடி பேர்களில் இவரும் ஒருவர் என கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top