சிறந்த பணிகளால் 3வது முறையாக ஆட்சியில் அமருவோம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மத்திய அரசின் சிறந்த கொள்கைகள் மற்றும் திட்டங்கள், அதன் செயல்படுத்திய விதத்தின் மூலம் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றுவதற்கான சூழல் நிலவுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 -25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து மக்களவையில் பேசிய அவர், நமது இளம் இந்தியா அதன் நோக்கங்களை எதிர்நோக்கி வேகமாக பயணித்து வருவதாகவும், நிகழ் காலத்தில் எண்ணி கர்வம் கொள்ளும் வகையிலும், சிறந்த எதிர்காலத்தை எதிர்நோக்கும் வகையிலும் நம்பிக்கை கொண்டு இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்திய பொருளாதாரத்தை சீரான வேகத்தில் கொண்டு செல்லும் பணியில் மத்திய அரசின் சிறந்த கொள்கைகள் மற்றும் அற்புதமான பணிகளின் காரணமாக மூன்றாவது முறையாக நாடாளுமன்றத்தில் பாஜகவின் குரல் ஒலிக்கும் என எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top