இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
கடந்த காலங்களில் தமிழக மீனவர்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்வதற்கும், கடற்பரப்பில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வெளியுறவுத்துறைக்கு பா.ஜ.க சார்பாகவும் தமிழக மீனவர்கள் சார்பாகவும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம், மேலும் இந்த மீனவர்களின் 2 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களை விரைவாக திருப்பி அனுப்பவும், அவர்களின் மீன்பிடி படகை விடுவிக்க மத்திய வெளிவிவகார அமைச்சகம் நடவடிக்ககை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.