நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை கட்சி தொண்டருக்கு வழங்கிய ராகுல்!

நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை கட்சி தொண்டருக்கு ராகுல் வழங்கிய நிகழ்வு சர்ச்சையாக வெடித்துள்ளது.

பொதுமக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி தற்போது அதளபாதாளத்தில் உள்ளது. அக்கட்சியை சேர்ந்த ராகுல் கடந்த ஜனவரி 14ம் தேதி யாத்திரை தொடங்கினார். ராகுல் செல்லும் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. அவருடன் செல்லும் வாகனத்தை தவிர பொதுமக்களோ அல்லது கட்சியினரோ கூட பங்கேற்பதில்லை. இது போன்ற வீடியோக்களை தினமும் நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்து வருகிறோம்.

இதற்கிடையே ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்ற ராகுல் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில், ‘‘காரின் மேற்புறத்தில் ராகுல் அமர்ந்திருந்தார். அவர் அருகே நாய் குட்டி ஒன்றும் இருந்தது. ராகுல் அந்த நாய்க்கு பிஸ்கட் கொடுத்தார். நாய் சாப்பிட மறுத்து விட்டது. இதையடுத்து அந்த பிஸ்கட்டை கட்சி தொண்டருக்கு கொடுக்கிறார்.

இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பா.ஜ.க., ஐ.டி., பிரிவு தலைவர் அமித் மாளவியா, மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் பதிவிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக அமித் மாளவியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் பூத் ஏஜென்ட்டுகளை நாயுடன் ஒப்பிட்டு பேசினார். இப்படி கட்சியின் தலைவர் மற்றும் பட்டத்து இளவரசர் கட்சியினரை நாய் போல் நடத்தினால் விரைவில் அந்த கட்சி மாயமாகிவிடும். இவ்வாறு அமித் மாளவியா கூறியுள்ளார்.

அசாம் முதல்வர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில்: ராகுல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் காங்கிரசில் நான் இருந்தபோது அந்த பிஸ்கட்டை என்னை சாப்பிட வைக்க முடியவில்லை. நான் ஒரு இந்தியன். நான் சாப்பிட மறுத்து காங்கிரசில் இருந்து விலகினேன். இவ்வாறு அந்த பதிவில் அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top