சென்னையில் நேற்று நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்றார். அவருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்;
இன்றைய தினம் சென்னையில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரைக்கு மக்கள் வழங்கிய அன்பும், ஆதரவும் மனதை நெகிழ செய்தது.
நமது நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீதும், அவரது தலைமைப்பண்பின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை, தமிழக மக்கள் நமது யாத்திரைக்கு வழங்கும் ஆதரவின் மூலம் காண முடிகிறது. இவ்வாறு தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.