சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்;
பல்வேறு துறைகளில் மிகுந்த ஆர்வம் மிக்கவராக, சிறப்பாக செயல்பட்டு வந்த சகோதரர் திரு. வெற்றி துரைசாமி அவர்களது அகால மறைவு, மிகவும் அதிர்ச்சிக்குரியது. அவரைப் பிரிந்து வாடும் அண்ணன் சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் வெற்றி துரைசாமி அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!