நாதுராம் கோட்சேவுக்கும் சபாநாயகர் அப்பாவுக்கும் வேண்டுமானால் தொடர்பு இருக்கலாம். ஆனால் ஆளுநருக்கும் கோட்சேவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்படாததாலும் உரையில் உண்மைக்கு புறம்பான பல செய்திகள் இருந்ததாலும் ஆளுநர் உரையை வாசிக்கப் போவதில்லை எனக் கூறி அமர்ந்து விட்டார்.
இதன் பின்னர், ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு, ஆளுநருக்கும் கோட்சேவுக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சையான கருத்தை கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியிருப்பதாவது:
‘‘நாதுராம் கோட்சேவுக்கும் சபாநாயகர் அப்பாவு~க்கும் வேண்டுமானால் தொடர்பு இருக்கலாம். ஆனால், ஆளுநருக்கும், கோட்சேவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சபாநாயகர் அப்பாவு தன் மகனுக்கு தேர்தலில் எம்.பி. சீட் கேட்பது போல, சட்டசபையில் சபாநாயகரின் உரை இருந்தது.’’ இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.