திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 4-வது ஆடியோவை வெளியிட்ட தலைவர் அண்ணாமலை, கே.சி.பழனிசாமியின் பெயரை முழுவதுமாக மூடிமறைப்பதில் காங்கிரஸ் உயர்மட்டத் தலைமையின் தலையீடு உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.
தலைவர் அண்ணாமலை திமுக மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். திமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வரும் அண்ணாமலை, ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார். கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் ‘திமுக ஃபைல்ஸ் பாகம் ஒன்றை’ வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் ‘திமுக பைல்ஸ் பாகம் இரண்டை’ வெளியிட்டார். அதில், அரசுத் துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன.
இதையடுத்து ‘திமுக பைல்ஸ் பாகம் மூன்று’ என பெயரிலான தொலைபேசி உரையாடல்களை தலைவர் அண்ணாமலை வெளியிட்டு வருகிறார். இதுவரை அவர் வெளியிட்ட உரையாடல்களில், திமுக எம்.பி.-க்கள் டி.ஆர்.பாலு, ராசா ஆகியோர் தனித்தனியே முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் உடன் பேசிய உரையாடல்களை வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து ‘திமுக பைல்ஸ் பாகம் மூன்றின்’ 4-வது ஆடியோ பதிவை அண்ணாமலை எக்ஸ் வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். அதில், திமுக எம்.பி ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையிலான மற்றொரு தொலைபேசி உரையாடல்கள் இடம் பெற்றுள்ளது:
உரையாடலில் 2ஜி விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி ராசாவும், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் பேசிக்கொள்கின்றனர். அவர்கள் பேசிய விபரங்கள்:
ராசா: சார்..
ஜாபர் சேட்: சொல்லுங்க சார்?
ராசா: நாளைக்கு திரும்ப இருக்கும்போல இருக்கு
ஜாபர் சேட்: எங்க சார்?
ராசா: கேசி பழனிசாமி உட்பட
ஜாபர் சேட்: அப்படியா?
ராசா: ஆமா!
ஜாபர் சேட்: உண்மையாவா சார்?
ராசா: நாளைக்கு, நாளை மறுநாள் இருக்கும்.
ஜாபர் சேட்: ஓகே சார்
ராசா: என்ன செய்வது
ஜாபர் சேட்: யாராவது மேலிடத்தில் இருந்து தலையிட வேண்டும்
ராசா: ஆமா! அகமது படேல்
ஜாபர் சேட்: ஆமா சார்,
ராசா: இரண்டு பேப்பர் கிடைத்துள்ளது. அகமது படேலுடன் பேசுங்கள், நாளை மீண்டும் வரலாம்.
ஜாபர் சேட்: நாளைக்கு என்றால் எங்கே சார்?
ராசா: இங்கேதான் உறவினர் இடத்தில்
ஜாபர் சேட்: ஓகே
ராசா: கேசி பழனிசாமி
ஜாபர் சேட்: கேசிபி எதுக்கு சார்
ராசா: டைரி இருக்கு இல்ல
ராசா: ஹலோ
ஜாபர் சேட்: சார் அய்யோ கடவுளே
ராசா: அவங்களுக்கு சொல்லிட்டேன்
ஜாபர் சேட்: கே.சி.பி. சாருக்க சொல்லிட்டிங்களா
ராசா: நான் சொல்லிட்டேன்
ஜாபர் சேட்: அது உங்களுக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்குமே
ராசா: ஏதோ கேட்பார்கள், என்ன என்று பார்ப்போம்
ஜாபர் சேட்: இந்த தகவல் உண்மைதான சார்
ராசா: அன்னைக்கு சொன்னதேதான் இன்னைக்கும் சொல்றோம்
ஜாபர் சேட்: ஓ, அது சரியாகத்தான் இருக்கும்.
ராசா: அவர் எனது உறவினர்களின் இடங்களுக்குச் செல்வார்
ஜாபர் சேட்: அவர்கள் போகட்டும். ஆனால் கே.சி.பழனிசாமியின் நிலை என்னாகும்?
ராசா: கேசிபி என்றால் ஒரு உறவினர் அவ்வளவுதான்
ஜாபர் சேட்: சரிங்க சார் பார்ப்போம்
இவ்வாறு ராசா, ஜாபர் சேட் இருவரின் உரையாடல் இடம் பெற்றுள்ளது.