சென்னையில் என் மண் என் மக்கள் பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழக பாரதி ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் சார்பாக ‘ மோடி 3.0 ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி ‘ என்ற தலைப்பில் நேற்று ( 16.02.2024 )
நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்வதற்காக இணையத்தின் மூலம் ஒரு இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நடக்கும் அரங்கை விட மூன்று மடங்கு நபர்கள் விரைந்து பதிவு செய்ததால், உடனடியாக பதிவு நிறுத்தப்பட்டது. 1500 பேர் மட்டுமே கலந்து கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்பட்டது.
டாக்டர்கள் ஆடிட்டர்கள், வக்கீல்கள், பேராசிரியர்கள் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரமுகர்களே நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகள், பத்து தலைப்புகளில் தொகுக்கப்பட்டு, மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்பு வைக்கப்பட்டது. அவை அனைத்துக்கும் தக்க பதில் அளித்து தலைவர் அண்ணாமலை பேசியது, அரங்கில் இருந்தவரை ஆச்சரியப்படுத்தியது , ஆர்ப்பரிக்க வைத்தது.
நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ், கோலாகல ஸ்ரீனிவாஸ், பாஜக மாநிலத் தலைவர் வினோத் பி. செல்வம் ஆகியோரும் உரையாற்றினர்.
பல்வேறு துறைகளைச் சார்ந்த, 1500 க்கும் மேற்பட்ட நிபுணர்களை ஒரே அரங்கில் கூடச் செய்த, அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் யதார்த்த ஜோதிடர் ஷெல்வி தாமோதர் மற்றும் அவரது குழுவினருக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது பாராட்டுகளை தெரிவித்தார்.