காஷ்மீரில் முதல் மின்சார ரயில்: பிரதமர் மோடியை பாராட்டிய பரூக் அப்துல்லா!

மின்சார ரயிலின் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று (பிப்ரவரி 20) தொடங்கி வைத்தார்.

ஜம்முவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ரம்பன் மாவட்டத்தில் பாரமுல்லா- ஸ்ரீநகர் -பனிஹால்-சங்கல்தான் வழித்தடத்திற்கான முதல் மின்சார ரயிலை, இன்று ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் ரயில் நிலையத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், காஷ்மீரின் முதல் மின்சார ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு, தேசிய மாநாடு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;

காஷ்மீருக்கு மின்சார ரயிலை கொண்டு வர அயராது உழைத்த ரயில்வே ஊழியர்களை வாழ்த்துகிறேன். இது காஷ்மீர் மக்களுக்கு பயனளிக்கும் என்று நம்புகிறேன். இப்படி ஒரு முயற்சி எடுக்கப்பட்டதே மிகப் பெரிய சாதனை. இதற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சகத்துக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

காஷ்மீரில் ரயில்களின் இணைப்பு சுற்றுலாவை மேம்படுத்தும். அதோடு நாட்டின் பிற பகுதிகளுக்கும் காஷ்மீர் மக்கள் எளிதாக பயணிக்க முடியும். காஷ்மீரில் இருந்து பொருட்களை மற்ற பகுதிகளுக்கு அனுப்பலாம். அதேபோல், நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் எந்த தடையும் இல்லாமல் பொருட்களை இங்கு கொண்டு வர முடியும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கை இணைக்கும் ரயில் சேவையை கொண்டு வருவதில் பல சிரமங்கள் இருந்தன. கடினமான நிலப்பரப்பு காரணமாக சுரங்கப்பாதைகளை அமைக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்த சிரமங்களை ரயில்வே நிர்வாகம் வெற்றிகரமாக கடந்துள்ளது. ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நாட்டின் மற்ற பகுதிகளுடன் இந்த ரயில் முழுமையாக இணைக்கப்படும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காஷ்மீரில் உள்ள அனைத்து மக்களும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இத்தனை ஆண்டுகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை, ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அனைத்தையும் நிறைவேற்றி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top