பாரதம் வளர்ந்த நாடாக மாற ,பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் தேர்ந்தெடுங்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சம்பா மாவட்டம், ஜாங்கிர் நகரில் பாஜக சார்பில் நேற்று (பிப்ரவரி 22) நடைபெற்ற கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
அப்போது அவர் பேசும்போது; ‘‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை காங்கிரஸ் கட்சி 75 ஆண்டுகள் தாமதப்படுத்தியது. வரும் மக்களவைத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகும்.
இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறவும், உலகின் ஆசானாக பாரத மாதா திகழவும் ,நீங்கள் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை தேர்வு செய்ய வேண்டும். திறமையற்ற காங்கிரஸ் அரசு, நக்சலிசத்தை கட்டுப்படுத்தவும் இல்லை, மக்களுக்கு நீதியை உறுதிப்படுத்தவும் இல்லை. அது ஊழலைச் செய்து ,மக்களுக்கு அநீதி இழைத்தது, இதனால் அக்கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது’’ என்றார்.