மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள மத்திய இணையமைச்சர் டாக்டர்.எல்.முருகனுக்கு, மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்தவரும், மத்திய இணையமைச்சருமான டாக்டர் எல்.முருகன், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து போட்டியின்றி, மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கோவைக்கு வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு, தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில்; கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று (பிப்ரவரி 22) நடைபெறவிருக்கும், என் மண் என் மக்கள் பயணத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வருகை தந்துள்ள, மத்திய இணையமைச்சர் எல். முருகன் அண்ணன் அவர்களை, கோவை விமான நிலையத்தில் இன்று மாவட்ட நிர்வாகிகள், தமிழக பாஜக சகோதர ,சகோதரிகள் சூழ வரவேற்று மகிழ்ந்தோம்.
இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதன்முறையாகத் தமிழகத்திற்கு வருகை தரும் அண்ணன் எல். முருகன் அவர்கள், இன்றைய நடைப்பயணத்தில் பங்கேற்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.