கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக விஜயதாரணி இருந்து வருகிறார். விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ,இன்று (பிப்ரவரி 24) டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக விஜயதாரணி மூன்றாவது முறையாக இருந்து வருகிறார். தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் முதன்மை கொறடா, கட்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை விஜயதாரணி வகித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைந்தார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக பாஜக உள்ளது என்றும் நரேந்திர மோடியின் தலைமை நாட்டிற்கு அவசியம் என்றும் பாஜகவில் இணைந்த பின் விஜயதாரணி தெரிவித்துள்ளார்.