விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி , இன்று பாஜகவில் இணைந்துள்ள நிலையில் ,அவரை வரவேற்பதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்;
“விஜயதாரணி அவர்களை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரி விஜயதாரணி அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, டெல்லியில் மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில இணைப் பொறுப்பாளர் திரு சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
சகோதரி விஜயதாரணி அவர்களை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.