மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதிக்கு தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்;
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும், தலைசிறந்த சமூக சேவகியுமான டாக்டர் சி சரஸ்வதி அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் சி சரஸ்வதி அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணியும் சமூகப் பணியும் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.