தமிழகத்தில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தி வரும் சம்பவம் தொடர்கதையாக உள்ளதாக, சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
செய்தி சேகரிக்க சென்ற பாலிமர் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான ஒளிப்பதிவாளர் செந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்குசென்னைபத்திரிகையாளர்மன்றம்கடும்கண்டனம்தெரிவிக்கிறத து. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினை வலியுறுத்துகிறது.
போதை பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக் என்பவரது வீட்டில் சோதனை நடத்தி ,மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று (28.-02.-2024) சீல் வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் ‘சகாரா எக்ஸ்பிரஸ்’ என்ற கூரியர் அலுவலகத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து நேற்று (29.-02.-2024) வியாழக்கிழமை காலை, செய்தி சேகரிக்க பாலிமர் செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செந்தில் ஆகியோர் சகாரா கூரியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
செய்தி சேகரித்துக் கொண்டிருந்த நிலையில், அங்கிருந்த அடையாளம்தெரியாத சமூக விரோத கும்பல் ஒன்று செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் செந்திலை கடுமையாக தாக்கியதுடன் கேமராவையும் பிடுங்கி ,ஒளிப்பதிவு செய்த காட்சிகளை அழித்ததுடன் அவரை ஒரு அறையில் அடைத்துள்ளனர். மேலும் செய்தியாளர் கதிரவனை அச்சேற்ற முடியாத இழிவான சொற்களால் அவதூறாக பேசியும். மிரட்டியும் உள்ளனர். தாக்குதலுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் செந்தில் தற்போது ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மோசமான தாக்குதல் சம்பவத்தை ஊடகவியலாளர் மீதான மிரட்டல் போக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஒளிப்பதிவாளர் செந்தில் தன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இன்று 29-.02-.2024 மாலை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது. சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியை காவல் ஆணையர் வழங்கியுள்ளார். ஆணையர் அளித்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையை வலியுறுத்துகிறோம்.
செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்கலைஞர்கள் சுட்டெரிக்கும் வெயில், மழை, இரவு பகல் பாராமல் களத்தில் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர்கள். பாடுபட்டு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வரும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்கலைஞர்கள்ஆகியோர் தொடர்ந்து அரசியல்வாதிகள், சமூக விரோதிகளால் வார்த்தைகள் மற்றும் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாகி வரும் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் மூத்த அரசியல்வாதியான நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் மிகத் தரம் தாழ்ந்தவை. தன்னிலை மறந்து தரம் தாழ்ந்த இழி சொற்களை பயன்படுத்தும் போக்கு தவிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டியதும் கூட .
பத்திரிகையாளர் நலன்களை பாதுகாக்க ,பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை விரைவில் தமிழ்நாடு அரசு இயற்றி பத்திரிகையாளர் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று இந்த தருணத்தில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.