போதைப் பொருள் தலைநகரமாக தமிழகத்தை மாற்றிய ஸ்டாலின் :  தலைவர் அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு!

போதைப்பொருள், கடத்தல்காரர்களின் புகலிடமாக இந்த மாநிலத்தை மாற்றியதற்காக முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை இன்று (01.03.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம் உண்மையிலேயே இந்தியாவின் போதைப்பொருள் தலைநகராக மாறியுள்ளது.  போதைப்பொருள், கடத்தல்காரர்களின் புகலிடமாக இந்த மாநிலத்தை மாற்றியதற்காக முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். திமுக நிர்வாகிகளின் நிறுவனங்களில் தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை நடத்தி வருகிறது, தமிழகத்துக்குக் கடத்தப்படவிருந்த ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் குஜராத் கடற்பகுதியிலும், இன்று ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள், நுண்ணறிவுத் துறையால் மதுரையிலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்புகள் அம்பலமாகிக்கொண்டிருக்கும் வேளையில், முதல்வர் ஸ்டாலின் இது குறித்து வாயே திறக்காமல் இருக்கிறார்.

இனிமேலாவது அவர் விழித்தெழுந்து நடவடிக்கை எடுப்பாரா, அல்லது வழக்கம்போல மக்களின் கவனத்தை இதிலிருந்து முக்கியமற்ற பிரச்சினைகளுக்குத் திசைதிருப்ப, தனது கூட்டத்தை பயன்படுத்தப் போகிறாரா? இவ்வாறு தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top