தூத்துக்குடியில் திமுக எம்.பி., கனிமொழி பேசிக்கொண்டிருந்தபோது, உடன்பிறப்பு ஒருவர் போதையில் அட்டகாசம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த உபிகள் பலர் மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் கனிமொழி மேடையில் பேசும்போது ஒரு போதை ஆசாமி, ஸ்பீக்கர் ஸ்டாண்ட் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கனிமொழி விழிபிதுங்கி நின்றுக்கொண்டு, அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். கீழே இறங்குங்கள் அடிப்பட்டு விடும் என்றார். இந்த வீடியோ இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அதாவது திமுக ஆட்சிக்கு வந்தால் மது முற்றிலும் ஒழிக்கப்படும் என பேசியவர்தான் கனிமொழி. ஆனால் நேற்று நடைபெற்ற திமுக கூட்டத்தில் போதையில் வந்த உபி செய்த அட்டகாசத்தை பார்த்து தமிழ்நாட்டு மக்களே சிரித்திருப்பார்கள். இதுதான் திமுக மதுவை ஒழித்த லட்சணமா என்ற விமர்சனங்களையும் மக்கள் சமூக வலைத்தளம் வாயிலாக கனிமொழிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.