சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் தாமரை மாநாடு முடிந்த பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் டீ குடித்த பின்னர், டீ விற்பவரிடம் பிறந்த வருடத்தை கேட்டு, அதன் அடிப்படையில் ஜிபே மூலம் தலைவர் அண்ணாமலை பணத்தை வழங்கினார்.
சென்னையில் நேற்று (மார்ச் 04) ஒய்எம்சிஏ மைதானத்தில் பாஜக சார்பில் தாமரை மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் தலைவர் அண்ணாமலை, அங்கு இருசக்கர வாகனத்தில் டீ விற்பனை செய்தவரிடம் டீ வாங்கி அருந்தி, அவர் வைத்திருந்த போன் பே, ஜிபே உள்ளிட்டவற்றை பார்த்து ஆச்சரியப்பட்டார். மேலும் டீ விற்பவரிடம் பிறந்த வருடத்தை கேட்டு, அதன் அடிப்படையில் 1978 ரூபாயை பணத்தை ஜிபே மூலம் அண்ணாமலை செலுத்தினார். இதனை கண்ட பாஜக தொண்டர்கள் கைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதனால் அந்த டீ விற்கும் நபர் மகிழ்ச்சி அடைந்தார்.