திமுக ஆட்சி அமைந்த பின்னர் , ஆளுங்கட்சியின் அவலங்களை பாஜகவினர் சமூக வலைத்தளம் மூலம் சுட்டிக்காட்டினால், அவர்களை போலீசாரை ஏவி விட்டு கைது செய்து வருவது தொடர்கதையாக உள்ளது.
சென்னை, சூளைமேட்டில் வசித்து வருபவர் திருமதி. சௌதாமணி. பாஜக ஊடகப் பிரிவு செயலாளராகவும், மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக, திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் சௌதாமணி கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 6 மணியளவில் சௌதாமணியை சென்னையில் கைது செய்த திருச்சி காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக சட்டம் ஒழுங்கை சரியாக பாதுகாக்காமல் தினமும் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இந்த அலங்கோல ஆட்சியைப் பற்றி சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டால் அவர்களை மட்டும் கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் திமுகவினரோ தினமும் போதைப் பொருள் கடத்தல் செய்து வருகின்றனர். அவர்களை தலைமறைவாக தப்பிக்க விட்டு வேடிக்கை பார்க்கும் அரசாகத்தான் இந்த ஸ்டாலின் அரசு உள்ளது என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.