‛இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியும், எழுத்தாளர் மற்றும் நன்கொடையாளருமான சுதா ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் மொத்தம் 245 எம்.பி.,க்கள் உள்ளனர். இதுதவிர மத்திய அமைச்சரவையின் பரிந்துரையில் 12 எம்.பி.,க்களை ஜனாதிபதி நியமனம் செய்வார். கலை, இலக்கியம், விளையாட்டு துறைகளை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், எழுத்தாளர் மற்றும் கல்வியாளருமான சுதாமூர்த்தியை ராஜ்யசபா எம்.பி.,யாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில்;
ராஜ்யசபா எம்.பி.,யாக சுதா மூர்த்தி நியமனம் செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சமூகப்பணி, கல்வியாளர் மற்றும் நன்கொடையாளர் ஆகிய பணிகளில் அவரின் பணி அளப்பரியது. ராஜ்யசபாவில் அவரின் பங்கேற்பு, பெண்களின் சக்திக்கு ஒரு சான்றாகும். இது நம் நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதில் பெண்களின் வலிமை மற்றும் திறனை எடுத்துக்காட்டுகிறது. ஆக்கப்பூர்வமான அவரின் பணிக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.