ஜம்மு காஷ்மீரில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது லட்சக்கணக்கான இளைஞர்கள் ராணுவத்தினர் மீது கல் வீசினர். ஆனால் தற்போது அவை முற்றிலும் பிரதமர் மோடியால் மாறியுள்ளது என காஷ்மீர் இளைஞர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர், காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.
சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காஷ்மீர் சென்றார். அங்கு ரூ.6,400 கோடி நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தார். பிரதமர் மோடி யை மக்கள் அனைவரும் உற்சாகமாக சாலையில் நின்று வரவேற்றனர். எங்கு பார்த்தாலும் மோடி, மோடி என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் காஷ்மீர் இளைஞர் ஒருவர் இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதில் தாம் 10-ம் வகுப்பு படிக்கும்போது கல்வீச்சில் ஈடுபட்டேன். அப்போது வேலை இல்லை. பின்னர் கல்வீசினால் ரூ.500 தருவார்கள். பாதுகாப்பு படையின் தாக்குதல், தோட்டாக்களுக்கு பயப்படாமல் கல்வீச்சில் ஈடுபட்டோம். எங்களை யாரும் திருத்தவில்லை.
பிரதமராக மோடி வரும்வரை நான் ஓட்டுப்போட்டது இல்லை. மோடி பிரதமரான பிறகு நிலைமை மாறி உள்ளது. நான் காப்பாற்றப்பட்டுள்ளேன். என்னை போல் கல்வீசிய ஆயிரக்கணக்கானவர்கள், லட்சக்கணக்கானவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். மோடி ஜி மீண்டும் பிரதமராக வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.