சி.ஏ.ஏ., சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இஸ்லாமிய சமூகத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று டெல்லி ஹஜ் கமிட்டி சி.ஏ.ஏ சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.
சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் சமீபத்தில் நடைமுறைக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இச்சட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இஸ்லாமியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறன.
இந்த நிலையில், சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வந்தது பற்றி செய்தியாளரிடம் பேசிய டெல்லி ஹஜ் கமிட்டி தலைவர் கவுசர் ஜஹான்,
“இதை நான் வரவேற்கிறேன். இது குடியுரிமை வழங்கும் செயல், பறிக்க முடியாது. பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நமது அண்டை நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் அல்லாதவர்களின் நிலை நன்றாக இல்லை. அவர்களுக்கு மரியாதையான வாழ்க்கையை வழங்க அரசு விரும்புகிறது, இதில் என்ன பிரச்சனை? இஸ்லாமிய சமூகத்திற்கு இதனால் எந்த பிரச்சனையும் இருக்காது, பீதி அடைய தேவையில்லை” எனத் தெரிவித்தார்.