மாற்றுக் கட்சியை சேர்ந்த மூன்று முக்கிய நிர்வாகிகள் இன்று சென்னை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக வில் இணைந்தனர்.
இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை அவர்கள் அனைவரையும் வரவேற்று எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
மக்கள் நீதி மையம் கட்சியின், மாநிலச் செயலாளரும் (பரப்புரை), கல்வியாளரும், பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை இயக்குனருமான, டாக்டர் அனுஷா ரவி அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமைப் பண்புகளாலும், நல்லாட்சித் திறனாலும் ஈர்க்கப்பட்டு, மாண்புமிகு மத்திய இணையமைச்சர் அண்ணன் மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்கள் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
டாக்டர் அனுஷா ரவி அவர்களை வரவேற்று மகிழ்வதோடு, தமிழகத்தில், மக்கள் விரும்பும் நேர்மையான, ஊழலற்ற அரசியல் மாற்றம் உருவாக, அவரது ஒத்துழைப்பையும் கோரிக் கொள்கிறேன்.
அதிமுக முன்னாள் எம்.பி., குமரி மாவட்ட முன்னாள் செயலாளர் விஜயகுமார்:
அதிமுக முன்னாள் எம்.பி.யும் , அதிமுகவின் குமரி மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளருமான ஏ.விஜயகுமார் அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியாலும், ஆளுமைத் திறனாலும் ஈர்க்கப்பட்டு, மாண்புமிகு மத்திய இணையமைச்சர் அண்ணன் திரு எல்.முருகன் அவர்கள் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
திரு ஏ.விஜயகுமார் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று, பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த அவரது அரசியல் அனுபவத்தையும், உழைப்பையும் கோரிக் கொள்கிறேன்.
பி.கே.எம். முத்துராமலிங்கம்:
அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தலைவராகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரிய ஐயா பி.கே.மூக்கையாத் தேவர் அவர்களது மகனும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு பி.கே.எம்.முத்துராமலிங்கம் அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியாலும், ஆளுமைப் பண்புகளாலும் ஈர்க்கப்பட்டு, மாண்புமிகு மத்திய இணையமைச்சர் அண்ணன் திரு எல்.முருகன் அவர்கள் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அண்ணன் திரு பி.கே.எம்.முத்துராமலிங்கம் அவர்களை வரவேற்று மகிழ்வதோடு, தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் கொள்கைகளான, தேசியமும் தெய்வீகமும் தமிழகத்தில் மீண்டும் தழைத்தோங்க, அவரது அரசியல் அனுபவத்தையும், உழைப்பையும் வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.