பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியின் முடிவில் சாலைகளில் சிதறி இருந்த பூக்கள் மற்றும் காகித பேப்பர் கழிவுகளை பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களே அகற்றி, மற்ற அரசியல் கட்சிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தனர்.
கோவையில் மார்ச் 18ம் தேதி மாலை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி நடந்தது. சாய்பாபா காலனியில் துவங்கிய வாகனப் பேரணி, ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சலகம் வரை இரண்டரை கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தது. லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.மோடியின் ஊர்வலம் தங்கள் பகுதியை கடக்கும் போது அந்தந்தப் பகுதி மக்கள் ஊர்வலத்தில் பூமாறிப் பொழிந்தனர். மோடியின் மோடியின் வாகனமும் பூக்களால் நிறைக்கப் பெற்றது.
‘மீண்டும் மோடி ஆட்சி’, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தொண்டர்களுக்கு தாகம் தீர்க்க, ஆங்காங்கே தண்ணீர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி நிறைவில் சாலைகள் முழுவதும் பூக்கள் குப்பை குவிந்திருந்தது. பதாகைகள், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்டவை சாலையில் எங்கும் சிதறிக்
கிடந்தன. இதை பா.ஜ.க., தொண்டர்கள் குழுக்களாக பிரிந்து பதாகைகள், தொப்பி, டம்ளர், தூவப்பட்ட பூக்கள் கழிவுகளை தனியே சேகரித்து, தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்தனர். இதை பார்த்த பொதுமக்கள் பாஜகவினரை பாராட்டினர்.
வழக்கமாக திராவிட மாடல் அரசியல் கட்சிகளின் கூட்டம் என்றாலே, கூட்டம் முடிந்த பின் மதுபாட்டில்கள் மற்றும் குப்பை கூளமாக காட்சியளிக்கும். அதை சுத்தம் செய்வதற்குள், மாநகராட்சி ஊழியர்களுக்கு போதும் போதுமென்றாகி விடும்.
ஆனால் நாட்டுக்கே தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி, தூய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும், கட்டுக்கோப்பான கட்சி என்ற வகையில், குப்பையை சுத்தம் செய்து, மற்ற அரசியல் கட்சிகளுக்கு, பா.ஜ.க., முன்னுதாரணமாக திகழ்கிறது என்று பொதுமக்கள் மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யம் தெரிவித்தனர்.
என் மண் என் மக்கள் யாத்தியை துவங்கிய நாளில் இருந்து யாத்திரையுடன் சுற்றுச்சூழல் அணி பிரமுகர்கள் பின் தொடர்ந்தனர். பாரதிய ஜனதா கட்சியில் எண்ணற்ற அணிகள் இருப்பது போல சுற்றுச்சூழல் அணி என்ற ஒரு அணி உண்டு. இதன் தலைவராக செயல்படுபவர் முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினரும் சேலம் மாவட்ட மாநகர முன்னாள் தலைவர் கோபிநாத். 234 தொகுதிகளிலும் யாத்திரையை பின் தொடர்ந்த இவர்கள் யாத்திரை ஒவ்வொரு இடத்தைக் கடந்து உடனேயே அங்கிருக்கும் குப்பைகளை அகற்றி விடுவார்கள். ராமேஸ்வரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட பிரம்மாண்ட கூட்டம், சமீபத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பல்லடம், சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம் ஆகிய பொதுக்கூட்டங்களில் முடிவிலும் பொதுக்கூட்டம் முடிந்து இரண்டு மணி நேரத்திற்கு சிதறி இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தி சாதனை செய்திருக்கிறார்கள். இங்கா, இப்படி ஒரு பொதுக்கூட்டம் நடந்ததா, நம்பவே முடியவில்லை என்று பார்க்கும் மக்கள் மலைக்கும் வண்ணம் இவர்கள் ஆற்றிய பணி, ஆற்றிவரும் பணி பொதுக்கூட்டம் நடத்தும் மற்ற கட்சிகள் இயக்கங்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதாக இருக்க வேண்டும் என்பதே தமிழக பாஜகவில் விருப்பம்.