மனித குலத்திற்கான சத்குரு ஜக்கி வாசுதேவின் இடைவிடாத சேவையைத் தொடர அவர் விரைவாக மீண்டு வர வேண்டும் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக் கசிவு காரணமாக, அவருக்கு டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் நலம் குறித்து அவரே வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், சத்குரு உடல் நலம் தொடர்பாக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்;
சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நிலையில் இருந்து விரைவில் மீண்டு வர எனது பிரார்த்தனைகள். எனது பிரார்த்தனைகள் எப்போதும் சத்குருவுக்காக இருக்கும். எப்போதும் போல் மனித குலத்திற்கான அவரது இடைவிடாத சேவையைத் தொடர அவர் விரைவாக மீண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.