கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக வி.எஸ் நந்தினியை தேசிய தலைமை அறிவித்துள்ளது.
விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதாரணி, காங்கிரஸில் பெண்களுக்கு மதிப்பு அளிப்பதில்லை என்று அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதன் காரணமாக தான் வகித்து வந்த சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதோட கூடவே காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தலை அறிவித்தது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அதன்படி விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ் நந்தினி போட்டியிட உள்ளதாக தேசிய தலைமை அறிவித்துள்ளது.
இவருக்கு மக்களிடம் அமோக ஆதரவு இருப்பதாகவும், இவர் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என மக்கள் தெரிவித்துள்ளனர்.