தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். திமுக அரசின் ஊழல்கள் மற்றும் பித்தலாட்டங்களை மக்கள் முன்பு அம்பலப்படுத்தி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் பல்லடம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி மற்றும் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டங்களில் தி.மு.க., மற்றும் காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் திமுக இடையிலான போட்டியில் யார் வெல்ல போகின்றனர் என்பதை பொது மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழகத்தில் பா.ஜ.க. 19 தொகுதிகளிலும்; தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நான்கு பேரும் போட்டியிடுகின்றனர். அதன்படி மொத்தம் 23 தொகுதிகளில் தாமரை சின்னம் போட்டியிடுவதில் 12ல் தி.மு.க., உடன் நேரடியாக மோதுகிறது. அனைத்து தொகுதிகளிலும் தாமரைக்கே மக்கள் வாக்களிக்கத் தயாராக உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி உள்ளது. குறிப்பாக கிராமப்பகுதிகள் முழுமையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
ஒவ்வொரு வீடுகளிலும் ஜல்ஜீவன் திட்டத்தில் வீட்டின் முன்பே குடிநீர் கிடைக்கிறது. முன்பு எல்லாம் குடிநீருக்காக மக்கள் பல கிலோ மீட்டர் நடந்து சென்று எடுக்கும் நிலை இருந்தது. ஆனால் பிரதமர் மோடி அதனை மாற்றி வீட்டிற்கே குடிநீர் கிடைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
இது போன்ற பல திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் ஒவ்வொரு தமிழர்களும் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யக் காத்திருக்கின்றனர். தேர்தல் மூலம் மக்கள் தாமரைக்கு வாக்களித்து தங்களது பாரதப் பிரதமராக , நரேந்திர மோடி அவர்களை மீண்டும் தேர்வு செய்வார்கள் என்பதுதான் தற்போதைய களநிலவரம்.