பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றுள்ளது. அக்கட்சி தருமபுரியில் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த தொகுதியின் வேட்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவியும், பசுமை தாயகம் நிர்வாகியான சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், கோவையில் தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், சௌமியா அன்புமணி வாரிசு அரசியலில் வருவாரா?, மாட்டாரா? என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன் என தெரிவித்தார். பசுமை இயக்கத்துக்காக பல ஆண்டுகளாக வேலை செய்து இருக்கிறார். அவர் ஒன்றும் 24 வயதில் சீட் கேட்கவில்லை, 30 வயதில் சீட் கேட்கவில்லை, 35 வயதில் சீட் கேட்கவில்லை, என தெரிவித்தார். சௌமியா அன்புமணிக்கு குழந்தை பிறந்து அந்த குழந்தைக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னரே அரசியலுக்கு வந்துள்ளார் என்றார். –
அதாவது சௌமியா அன்புமணியின் மகளுக்கு திருமணமாகி குழந்தை பிறந்துள்ளது என்பதைதான் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார். அதனை திமுகவின் ஜால்ரா மீடியாக்கள் அப்படியே திரித்துப் பரப்புகிறது.
இதனை இரண்டு திராவிட கோஷ்டிகளும் சமூக வலைத்தளங்களில் மாற்றி பரப்பி வருகிறது.பொய்யிலே பிறந்து , பொய்யிலே வளர்ந்து, பொய் சொல்லியே ஆட்சியை பிடித்த திராவிட கோஷ்டிகளுக்கு இதுபோன்ற கருத்துக்களை பரப்புவது புதிதல்ல என சாதாரண பொதுமக்களே திமுகவினரை. வறுத்தெடுத்து வருகின்றனர்.